Friday, December 8, 2006
வணக்கம்
வணக்கம். வலைதளத்தில் என் எண்ணங்களும் இணைகிறது. எண்ணிப் பார்த்தால் எண்ணங்கள் இல்லாமல் எதுவும் இல்லை என்று தான் தோன்றுகிறது.இன்று நாம் அனுபவிக்கும் எல்லாமே எவனோ ஒருவனின் எண்ணத்தில் இருந்து தோன்றியவை.எண்ணங்கள்தான் நாம் யார் என்பதை தீர்மானிக்கின்றன.எண்ணங்க்ளே இல்லாது போய் வாழ வேண்டியது அவசியம் என்னும் நிலை ஒன்று ஏற்படுமானால்? நமது நம்பிகையும் கனவுகளையும் இழந்தால் அந்த நிலைக்கு பெயர் தான் நரகம் என்ற கற்பனையின் நிஜ வடிவாக இருக்கும்.நாம் ஒருவரை மதிப்பத்ற்கும் நேசிப்பதற்கும் வெறுபதற்கும் அவரது எண்ணங்களே காரணமாக இருக்கின்றது.வள்ளுவரின் எண்ணங்களை திருகுறளில் படிக்கிறோம்,பாரதியின் எண்ணங்களை அவனது கவிதைகளில் காண்கிறோம். கவிஞன், தத்துவ ஞானி, அறிவியல் அறிஞன், குப்பன், சுப்பன் இன்னும் புவனம் வாழ் மனிதகுலம் அனைத்துக்கும் பொதுவானவை எண்ணங்கள். எதை எண்ணுகிறோம் என்பதில் பேதம் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் எண்ணமுண்டு.
Subscribe to:
Posts (Atom)